அதிக நேரம் வேலை அளித்ததால் ராணுவ அதிகாரியை சுட்டுக்கொன்று சிப்பாய் தற்கொலை செய்தார்.
சென்னை பரங்கி மலையில் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இங்கு ஹவில்தார் தகுதியில் பணிபுரிந்த பிரவின் குமார் யோகி வீட்டில் ஷகிர் என்ற சிப்பாய் உதவிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்.
அவருக்கு பிரவின்குமார் அதிக வேலை அளித்ததாகவும், அதிக நேரம் பணிபுரிய செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிப்பாய் ஷகிர், எதிர்பாராத நேரத்தில் அதிகாரியை சுட்டுக்கொன்றார். பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.