சாத்தான்குளம் அருகே மாலை வரை தலைகீழாக பறந்த தேசிய கொடி

0
2435

குடியரசு தினத்தை முன்னிட்டு சாத்தான்குளம் ஒன்றியம் தட்டார் மடம் அருகே உள்ள நடுவக்குறிச்சி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சபிதா செல்வராஜ் தேசிய கொடியை அலுவலகத்திற்கு முன்பு ஏற்றினார். அந்தக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டு இருந்தது. மாலை 3 மணி வரை அவ்வாறு தலைகீழாக பறந்தது.

இந்நிலையில் 3 மணி அளவில் அக் கொடியை பார்த்த காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரங்கநாதன் கொடி தலைகீழாக பறந்ததை படம் எடுத்து ஊராட்சி தலைவர், ஒன்றிய ஆணையாளர் உள்ளிட்டோருக்கு அனுப்பினார்.

அதையடுத்து அவசர, அவசரமாக வந்த ஊராட்சி எழுத்தர் கொடியை நேராக ஏற்றி பறக்க விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here