திருச்செந்தூரில் ஆளுங்கட்சி தலையீட்டால் மணல் லாரிகள் விடுவிப்பு

0
1404

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட மணல் லாரிகள்  ஆளுங்கட்சியினர்  தலையீட்டால்  விடுவிக்கப்பட்டன

குளங்களில் இருந்து கரம்பை மண் அள்ள விவசாயிகளுக்கு கொடுத்த அனுமதியை  தவறாக பயன்படுத்தி வணிக ரீதியில் உடன்குடி அனல்மின் நிலைய பணிகளுக்கு விற்பனை செய்து வந்தனர்.

அவ்வாறு மணல் கொண்டு சென்ற லாரிகளை நேறறு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருச்செந்தூரில் சிறைப்பிடித்தனர். அந்த லாரிகளை பறிமுதல் செய்து கொண்டு சென்ற காவல்,வருவாய் துறையினர் ஆளுங்கட்சியினர் தலையீட்டால் அவற்றை விடுவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் இயக்க பிரமுகர் விடுதலை செழியன் கூறுகையில்,’ ‘நேற்று மாலை 03-50 மணிக்கு திருச்செந்தூரில் சட்டவிரோதமாக மணல் அள்ளிச்செென்ற 4 லாரிகளை திருச்செந்தூர் தெப்பக்குளம் அருகில் சிறைப்பிடித்தோம்.

உடனே திருச்செந்தூர் தாலுகா காவல் ஆய்வாளரும், கோவில் காவல்நிலைய பொறுப்பு ஆய்வாளருமான திரு.முத்துராமன் அவர்களிடம் செல்போன் வழியே தகவலை தெரிவித்தேன். அவரும் உடனடியாக காவல் வாகனத்தில் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது திருச்செந்தூர் வருவாய் ஆய்வாளரும் உடனிருந்தார்.

நான் காவல் ஆய்வாளரிடம் புகார் மனு கொடுத்தபோது,, அவர் அதை வாங்க மறுத்து, இதற்கு  வருவாய் ஆய்வாளர் தான் புகார் தர வேண்டும்.. புகார் தந்தவுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுப்போம் என்று 4 லாரிகளையும் லாரி ஓட்டுநர் மூலம் காவல் நிலையம் கொண்டுசென்று நிறுத்தினார்.

ஆனால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் சிலமணி நேரங்களில் அந்த மணல் லாரிகளையெல்லாம் யாருடைய உத்தரவின்பேரிலோ தாலுகா காவல் நிலையத்தில் இருந்து வெளியே அனுப்பி விட்டார.

மணற்கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறை அதிகாரிகளே அக்கொள்ளையர்களை காப்பாற்ற துடிப்பது பேரதிர்ச்சியை தருகிறது. இப்போதும் வழக்கம்போல் லாரிகள் மணல் கடத்திக் கொண்டிருக்கின்றன’ என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here