சங்கரன்கோவில் அருகே உள்ள பொட்டல்பட்டியை சேர்ந்தவர் சுடலை இவர் அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு 2018 பாலியல் தொல்லை கொடுத்ததாக சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நெல்லை போக்சோ நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜரான அவருக்கு10 வருட தண்டனை விதிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுடலை, தான் மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டார்.

இதையடுத்து திகைத்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.









