விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ள செய்தியில், விக்ரம் லேண்டர் ஆபத்தான இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சந்திரனின் தென் துருவப் பகுதிக்கு ஹெராக்கிள்ஸ் ரோபோடிக்கை அனுப்புவதற்கான பணிகளில் தயாராவதற்கு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தற்போது கனடா மற்றும் ஜப்பானிய விண்வெளி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இதற்கான ஆய்வில் தென் துருவம் குறித்தும் லேண்டர் நிலை குறித்தும் ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-
சந்திரனின் மேற்பரப்பு (தென் துருவம்) ஒரு ஆபத்தான சூழல் நிறைந்த பகுதியாகும் அங்கு சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் மற்றும் கதிர்வீச்சு நன்றாக சந்திர தூசியை சந்திக்கின்றன.
இதன் முடிவுகள் ஆச்சரியமானவை, கணிக்க முடியாதவை மற்றும் அபாயகரமானவை. அங்கு கதிர்வீச்சுகள் அதிகமாக இருக்கும். மேலும் தூசுகள் நிறைந்த பகுதியாகும்.
சந்திரனில் உள்ள தூசி, விக்கரம் லேண்டரின் உபகரணங்களுடன் ஒட்டிக்கொண்டு, இயந்திர சிக்கல்களை ஏற்படுத்தலாம். சூரிய பேனல்கள் மற்றும் பிற மேற்பரப்புகள் அவற்றின் செயல்திறனை குறைக்கலாம்.
மின்காந்த சக்திகள், சந்திரனின் மேற்பரப்பைச் சுற்றியுள்ள தூசுகள் கூடுதல் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இந்த துகள்களால் ஏற்படும் மின்காந்த அலைகள் எதிர்காலத்தில் லேண்டர்களுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தாக இருக்கலாம்.
சந்திர தூசி மற்றும் சந்திரனின் மேற்பரப்பில் அதன் செயல்கள் பற்றி அதிகம் அறியப்படவில்லை.
லேண்டர் தரையிறங்கும் போது சூரிய சக்தி உற்பத்தியை பாதிக்க கூடியதாக இருக்கலாம். செங்குத்தான சரிவுகள் அல்லது பெரிய கற்பாறைகள் போன்ற ஆபத்துகளையும் கண்காணிக்க வேண்டும் என கூறி உள்ளது.