கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பள்ளி விளை முத்தாரம்மன் கோவில் குடியிருப்பு பகுதியில் புதிய கட்டட பணி நடைபெற்று வருகிறது அங்கு அஸ்திவாரம் தோண்டிய பள்ளத்தில் பெருச்சாளி மாட்டியது அதை உணவுக்காக பிடிக்க பள்ளத்தில் இறங்கிய இரண்டு அடி அனலி பாம்பு அங்கு சிக்கியது
அங்கிருந்து வெளியேற முடியாமல் இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் வனத்துறைக்கு தகவல் அளித்தது தொடர்ந்து வனத்துறையினர் லாவகமாக அனலி பாம்பை பிடித்து சென்று அடந்த காட்டில் விட்டனர்.

குடியிருப்பு பகுதியில் கொடிய விஷமுள்ள அனலி பாம்பு அப்பகுதிக்குள் நுழைந்தது அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள அதே வேளையில் பணியை விட்டு வெளியேற முடியாத அச்சத்தில் எலியை விழுங்காமல் இருந்தது சிரிப்பை வரவழைத்தது.









