பெரும்பான்மையை இழந்தார் பிரிட்டன் பிரதமர்

0
1236

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் ‘பிரெக்ஸிட்’ மசோதா தாக்கல் செய்து, நாடாளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடந்தது. ஆனால் அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு அதில் தோல்வியடைந்தது. இதையடுத்து தெரசா மே கடந்த மாதம் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக பிரெக்ஸிட் மசோதாவை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இதற்கான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

இந்த சூழலில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிராக்னல் எம்.பி பிலிப் லீ, லிபரல் டெமக்கிராட்சு கட்சியில் இணைந்தார். இதனால், நாடாளுமன்றத்தில் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்துள்ளார். இதனால் அவரது பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here