சென்னை அம்பத்தூரில் ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றிய 17 வயது சிறுவனை மடக்கிய ஏட்டு சரவணன் அவனை எச்சரித்து அனுப்ப முயன்றார். ஆனால், ஏட்டு கேள்வி கேட்டதால் டென்ஷன் ஆன சிறுவன் கையில் வைத்திருந்த கத்தியால் ஏட்டுவை குத்திவிட்டு தப்பியோடினான்.
பொதுமக்கள் பிடித்து சிறுவனை போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணை நடத்துகின்றனர்.