எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதி 2 பேர் பலி 6 பேர் படுகாயம்

0
554

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பணிக்கன்குப்பத்தைச் சேர்ந்த 8பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக காரில் புறப்பட்டு வந்தனர். காரை அதே ஊரைச் சேர்ந்த பிராங்ளின் (32), என்பவர் ஓட்டி வந்தார். காரில், விஜி (எ) நந்தகுமார் (40), வைத்தியநாதன் (48), பாலு (36) ராஜ் (36), சௌத்ரி (28), ரமேஷ் (40), செந்தில்குமார் (35) ஆகிய 8பேர் இருந்துள்ளனர்.
இன்று காலை எட்டயபுரம் அருகே கீழ ஈரால் பகுதியில் கார் வந்தபோது, நாமக்கல்லில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் நோக்கிச் சென்ற லாரியின் பின்புறம் கார் மோதியது. இவ்விபத்தில் கார் டிரைவர் பிராக்ளின், விஜி (எ) நந்தகுமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இதுகுறித்து எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா விசாரணை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here