நெல்லை பிப்ரவரி 5 மண்டல அலுவலகத்திலும் இரண்டு இடங்களில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
இன்று வெள்ளிக்கிழமை என்பதால் பகல் 10. 30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ராகு காலம் என கருதி வேட்பாளர்கள் வருகை மிகவும் குறைவாக இருந்தது
பிற்பகல் நேரத்தில் வேட்பாளர்களையும் வருகை அதிகரிக்க தொடங்கியது
வேட்பாளர் ஒருவருடன் ஒரு ஆதரவாளர் மட்டுமே மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர் ஒரு வேட்பாளர் வெளியே வந்த பின்னர் மறு வேட்பாளர் தேர்தல் நடத்தும் அதிகாரியை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்
நெல்லை மாநகர பகுதியில் துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் ஏற்பாட்டின் பேரில் உதவி போலீஸ் கமிஷனர் ஞானசேகரன் பாலச்சந்திரன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மனுத்தாக்கல் செய்யும் அலுவலகங்களில் போடப்பட்டு இருந்தது.
மனு தாக்கல் நிறைவு நாள் என்பதால் அதிமுக திமுக பாஜக காங்கிரஸ் தேமுதிக கம்யூனிஸ்ட் சமத்துவ மக்கள் கட்சி என பல்வேறு கட்சிகள் சார்பாகவும் சுயேச்சைகள் சார்பாகவும் போட்டி போட்டுக்கொண்டு மனு தாக்கல் செய்தனர்.
மாநகராட்சி வார்டுகளுக்கு மட்டும் 150 க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது, இதேபோல் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், களக்காடு உள்ளிட்ட நகராட்சி வார்டு களுக்கும், 17 பேரூராட்சி வார்டுகளுக்கும் அந்தந்த அலுவலகங்களில் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
நேற்று வரை மாவட்ட அளவில் சுமார் 1200 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று கட்டுக்கடங்காத வேட்பாளர் கூட்டம் அலை மோதியதால் மனுத்தாக்கல் எண்ணிக்கை 1,800 வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய தினம் மாநகராட்சி மண்டல அலுவலகம், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட உள்ளது, வாபஸ் வர விரும்புபவர்களுக்கு 7ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது
வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது








