விருதுநகரில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி

0
1068

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக இருந்த, 25 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில், அனைத்து இடங்களிலும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.


விருதுநகர் மாவட்டத்தில் 1 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 3 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்,4 கிராம ஊராட்சி தலைவர்கள், 17 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 25 பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, 9 மையங்களில் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினராக, திமுக வேட்பாளர் பகவதி வெற்றி பெற்றார். 3 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் 2 இடங்களில் திமுக வேட்பாளர்களும், ஓரிடத்தில் திமுக தோழமை கட்சியான இ.கம்யூ வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.

4 ஊராட்சி தலைவருக்கான தேர்தலில், அழகியநல்லூர் ஊராட்சி தலைவராக ரவிச்சந்திரன், உளுத்திமடை ஊராட்சி தலைவராக ரேவதி, என்.முக்குளம் ஊராட்சி தலைவராக இப்ராகிம், பாவாலி ஊராட்சி தலைவராக அழகம்மாளும் வெற்றி பெற்றனர். 17 ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக திமுக மற்றும் அதன் தோழமை கட்சியினர் வெற்றி பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here