கமிஷன் வாங்கும்அதிகாரிகளால் காவு வாங்கும் கல்குவாரிகள்

0
619

நெல்லை அருகே அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்து தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய கனிம வள சுரங்கத்துறை இயக்குநர் விமல்ராஜ், குவாரி அனுமதியின்றி இயங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார். 2018ல் அனுமதி பெற்ற இந்த குவாரியின் வேலைகள் 2021ல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. அதன்பின்பு அனுமதியின்றியே இதுவரை நிறுவனம் இயங்கிவந்துள்ளது.

இதுபோன்ற கல்குவாரிகள் பணகுடி, நாங்குநேரி, நெல்லை பகுதிகளில் அதிகம் இயங்குகின்றன. மாதந்தோறும் அதிகாரிகளுக்கு மாமூல் போகின்றன. ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு நன்கொடையும் ஆண்டுதோறும் உண்டு.

காவல்கிணறு அருகே உள்ள கல்குவாரி ஒன்றிலிருந்து இரு திமுக பிரமுகர்களுக்கு கோடியில் பணம்


தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே இயங்கி வந்த இந்த குவாரியை இதுவரை கண்காணிக்காத அதிகாரிகள், மாவட்டத்தில் இயங்கும் 52 குவாரிகளை கண்காணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். பல்வேறு குவாரிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட ஆழமாக கற்களை வெட்டியெடுப்பது, பாதுகாப்பற்ற சூழலில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அரசு வேலைகளுக்காக அதிகாரிகள் அவற்றை கண்டுகொள்ளாமல் இருப்பது வழக்கமாக உள்ளது.

ஆட்சியில் முக்கிய பொறுப்பிலிருக்கும் ஒருவருக்கு 2 கோடி, உள்ளாட்சி பிரமுகர் ஒருவருக்கு 1 கோடி என 3 கோடி ரூபாய் காவல்கிணறு அருகே இயங்கும் பெரிய குவாரி ஒன்றிலிருந்து அவர்கள் பதவிக்கு வந்த தொடக்கத்தில் சென்றுள்ளது.

இதுபோன்ற சாவுகளுக்கு முன்பே அதிகாரிகளுக்கும் வாய்க்கரிசிபோடுகிறார்கள். எனவே, கொடூர உயிரிழப்புக்கு கந்துடைப்பு விசாரணை மட்டுமே நடக்கிறது.

எனவே, தமிழ்நாடு முழுவதும் அனுமதியற்ற குவாரிகளை உடனே மூடவும், அனுமதி பெற்றும் விதிமீறலில் ஈடுபடும் குவாரிகளின் செயல்பாட்டை முடக்கவும் அரசு முன்வரவேண்டும். இயங்கும் குவாரிகளின் தொழிலாளர்களுக்கான ஊதியம், சுற்றுச்சூழல் சீர்கேடு போன்றவற்றை பற்றியும் அந்தந்த துறையினர் ஆராய்வது அவசியம் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


அதுமட்டுமின்றி, எவ்வித அனுமதியுமின்றி 7 மாதங்களுக்கு மேலாக இயங்கிய அடைமிதிப்பான்குளம் குவாரியை கண்காணித்து நடவடிக்கை எடுக்காத வருவாய், கனிமவள அதிகாரிகளை பணிநீக்கம் செய்து குற்றப்பிரிவுகளில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here