சாத்தான்குளம் ஆர்சி வடக்கு தெருவில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை செல்லும் சாலையானது தற்போது அடைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி சுபக்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் அந்தப் பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.









