வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குளியை சேர்ந்த கணபதி மகன் ஆறுமுகம்(40). இவருக்கும் இதே ஊரை சேர்ந்த மாசானத்துக்கும் சில நாட்களுக்கு முன்பு மாடு மேய்ப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த முன்விரோதத்தில், இன்று இரவு மாடு மேய்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த ஆறுமுகத்தை ஊர் எல்லையில் மாசானமும் மற்றொருவரும் வழிமறித்துள்ளனர்.
அப்போது மாசானம் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.













