பிரான்ஸ் பியாரிட்ஸ் நகரில் ஜி 7 மாநாடு தொடங்கியது. அமெரிக்கா, ஜெர்மன், ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட 7 நாடுகளின் தலைவர்களும் வந்துவிட்டனர். இந்தியா, ஆஸ்திரேலியா, சிலி உள்ளிட்ட 6 நாடுகளின் தலைவர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க்கும் இதில் பங்கேற்கின்றனர்.
அமெரிக்க & சீன வர்த்தகப் போர், ஈரானுக்கெதிரான பொருளாதாரத் தடை, அமேஸன் மழைக்காட்டில் பரவியுள்ள தீ, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதில் ஏற்படும் தாமதம் ஆகியன குறித்து விவாதிக்கப்படவிருக்கிறது.
இதற்கிடையே, சுற்றுச்சூழல் பாதிப்பு, உலகமயமாக்கல், பாலஸ்தீன உரிமை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து பியாரிட்ஸ் நகரின் அருகே பிரான்ஸ் & ஸ்பெயின் எல்லையில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டு வீசி போலீசார் கலைத்தனர்.













