மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா
பெருங்குடியை அடுத்த வளையபட்டியைச் சேர்ந்த ராஜூ என்பவரது மகன் பாலு (31). கட்டடத்தொழிலாளி. இவர், வீட்டின் அருகே பசுமாட்டிற்கு வைக்கோல் வைத்துக்
கொண்டிருந்தபோது, திடீரென இடி மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.அவரது மாடும் சம்பவ இடத்திலேயே மடிந்தது .

இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருங்குடி போலீஸார் பாலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.














