தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கா.ஆ மேல்நிலைப் பள்ளியில் 1973 – 1974ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி படித்த மாணவர்களின் பொன்விழா ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பழைய மாணவர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பொன்விழா மலர் வெளியீட்டு விழா நடந்தது.








