நெல்லை அருகே மணப்படை வீட்டில் சரியான நேரத்தில் வராத பஸ்சை பள்ளி மாணவ மாணவியர் பொதுமக்கள் இன்று காலை சிறைப் பிடித்தனர்.
ஏற்கனவே நெல்லையிலிருந்து இந்த ஊர் வழியாக இயக்கிய பேருந்துகள் நிறுத்தப்பட்ட நிலையில், அவ்வபோது வந்துகொண்டிருந்த நகரப்பேருந்தும் உரிய நேரத்துக்கு வராததால் பள்ளி மாணவ, மாணவியர் அவதிப்பட்டனர். தேர்வு வேறு நடந்துகொண்டிருப்பதால் அதிக சிரமத்துக்குள்ளான மாணவ, மாணவியர் இன்று தாமதமாக வந்த பஸ்சை சிறைப்பிடித்தனர். இனி சரியான நேரத்துக்கு வருவதாக கூறி அவர்களையும் ஏற்றிக்கொண்டு பஸ் ஊழியர்கள் புறப்பட்டனர்.