ஸ்ரீவை அருகே ஆடு மேய்ந்த தகராறில் கொலை – 4 பேர் கைது

0
315

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆடு வயலில் மேய்ந்த தகராறில் வாலிபரை வெட்டிக் கொன்ற அண்ணன், தம்பி உட்பட 4பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தெப்பகுளம் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் கோபால் (25), விவசாயம் செய்து வருகிறார். மேலும் ஆடு மாடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அவரது ஆடு பக்கத்து வயலை மேய்ந்து விட்டதாம். இதனால் தோழப்பன் பண்ணை வடக்கு தெருவைவ் சேர்ந்த உலகு மகன்கள் பாதாளம் (45), இசக்கி (43), இசக்கி மகன் உலகநாதன் (24), மணி மகன் ரமேஷ் (33) ஆகிய 4பேரும் அவரை அரிவாளால் வெட்டினார்களாம்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் கொலை வழக்குப் பதிந்து, பாதாளம், இசக்கி உட்பட 4பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here