யானை தந்தம் திருடிய 3 பேர் கைது

0
422

கோவை போளுவாம்பட்டி வனச்சரகம், ஜவ்காடு வனப்பகுதியில் உயிரிழந்த யானையின் எலும்பு கண்டறியப்பட்டது.

மாவட்ட வன அலுவலர் தலைமையில் ஐந்து தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.விசாரணையில், 30 வயதுடைய யானையின் உடலில் இருந்து இரண்டு தந்தங்களும் அகற்றப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

அப்பகுதியில், முட்புதருக்குள் மறைத்துவைக்கப்பட்ட தந்தம் கைப்பற்றப்பட்டது.இது தொடர்பாக, தாணிகண்டி கிராமத்தை சேர்ந்த மருதுபாண்டி,27, ராமன்,50, சின்னான், 50 ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

மூங்கில் குருத்து எடுக்கச்சென்றபோது, இறந்த யானையின் தந்தத்தை எடுத்து மறைத்து வைத்ததாக ஒப்புக்கொண்டனர். மூவரும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பவானி சாகர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here