கோவில்பட்டி அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலி

0
1186

கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிசாமி ( 61). விவசாயியான இவர் இன்று காலை தனது நிலத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளார். நாலட்டின் புதூர் – இடைசெவல் அருகே உள்ள மதுமிதா கேண்டின் அருகே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மாரிசாமி மீது மோதியது. இதில் தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் மாரிச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் நாலட்டின்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் ராஜூவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here