தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள தெற்கு பொம்மையாபுரம் ஆறுமுகம் என்ற புலிப்பாண்டி என்பவருக்கு இரண்டு மகள்கள் மூன்று மகன்கள் உள்ளார்கள். . அதில் மூத்த மகன் முனியசாமிக்கு சிறிது மனநிலை பாதிப்பு உள்ளது. எனவே இன்னும் திருமணம் முடியவில்லை.இவருக்கு மனநிலை சரியில்லாத காரணத்தால் சொத்துக்களையும் மற்ற இரு மகன்களுக்கு புலிப்பாண்டி எழுதி வைத்து விட்டார். . இளைய மகன் முருகன் (45.) திருமணம் முடித்து ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியில் மனைவி புவனேஸ்வரி (40). மகள் அஞ்சலி. ( 20). மகன் தமிழன் ( 16.) ஆகியோருடன் வசித்து வருகிறார்
இவர் நேற்று புதிதாக ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தை வாங்கி கொண்டு தனது தந்தையிடம் காண்பிக்க வந்து இரவு தெற்கு பொம்மையாபுரம் கிராமத்தில் வீட்டில் படுத்து தூங்கி விட்டார்.
ஏற்கனவே சொத்துக்களை தன் சகோதரர்களுக்கு மட்டும் தந்தை எழுதி வைத்ததால் ஆத்திரத்தில் இருந்த முனியசாமி, இரவு சுமார் ஒரு மணி அளவில் தந்தை வீட்டில் தங்கிய தனது உடன் பிறந்த தம்பி முருகனை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு பசுவந்தனை காவல் நிலையம் வந்து சரண்டர் ஆகி விட்டார்.
இறந்தவரது உடல் காவல்துறையில் கைப்பற்றப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது







