மதுரை அருகே பள்ளி மாணவர்கள் மோதல் – மது பாட்டில் குத்து- கைது

0
821

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பில் படிக்கும் வெள்ளைச்சாமி (16) என்ற மாணவன் இன்று பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளார். இதனை சகமாணவர்கள் கேலி, கிண்டல் செய்துள்ளனர்.

இதனால் மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியுள்ளது. கோபமடைந்த மாணவர் வெள்ளைச்சாமி, சக மாணவரான அவினாஷ் (16) என்பவரை மதுபாட்டிலை உடைத்து தலையில் சராமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த மாணவர் அபினாஷ் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து பாட்டிலால் குத்திய மாணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here