கோவையில் இரிடியம் மோசடி கும்பல் கைது – 99 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்

0
993

கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து  பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் உள்ளதாக கூறி ஒரு கும்பல், கேரளாவை சேர்ந்த நபர்களிடம் சோதனை செய்து காட்டி வருவதாக செட்டிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை அடுத்து அங்கு சென்ற போலீசார் வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அங்கு கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள், கவச உடை, ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைத்திருந்தது தெரியவந்தது.  இதையடுத்து வீட்டில் இருந்த  8 பேரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது இரிடியம் மற்றும் :ரைஸ் புல்லிங்: விற்பனை மோசடிக்கு கூடியிருந்தது தெரியவந்தது.   

முதல்கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் ராணிப்பேட்டையை சேர்ந்த தினேஷ்குமார், சூரியகுமார்,  திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த போஜராஜ்,  கோவையை சேர்ந்த முருகேசன் சேர்ந்த செந்தில்குமார்,  வெங்கடேஷ் பிரபு என்பதும், இவர்கள் கேரளாவை சேர்ந்த ரைஸ் புல்லிங் மோசடி கும்பலை சேர்ந்த சாஜி என்பவருடன் சேர்ந்து பணத்தேவை மற்றும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக ரைஸ் புல்லிங் தேவைப்படுவோரை இடைத்தரர்கள் மூலம் தேர்ந்தெடுத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

தற்போது கேரளாவை சேர்ந்த மகரூப், அப்துல் கலாம் ஆகிய இரண்டு பேரை அனுகி தங்களிடம் 2 ஆயிரம் கோடி மதிப்பிலான இரிடியம், ரைஸ் புல்லிங் இருப்பதாக கூறிய இந்த கும்பல் பல தவணைகளாக ரூ.27 லட்சம்  வரை பணத்தை பெற்றுள்ளனர்.

அவர்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க இந்த கும்பல் சோதனை செய்து காட்டியும் பணம் பறித்து வந்துள்ளனர். சாதாரன வெங்கல செம்பை பெட்டிக்குள் வைத்து, பெட்டிக்குள் மிளகாய் ஸ்பிரேவை அடித்து வைத்துக் கொள்கின்றனர். பின்னர் வாங்க வருவோரிடம் செய்வோரிடம் கவச உடைகளை அணிந்து கொண்டு வெளியே எடுக்கும் போது அந்த இரிடியத்திற்கு சக்தி உள்ளது போல காட்டி ஏமாற்றியதும் கண்டிபிடிக்கப்பட்டது.

இந்த கும்பலை 6 பேரையும் பிடித்த போலிசார் அவர்களிடமிருந்து 99.20 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள், இரண்டு கவச உடைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான கேரளாவை சேர்ந்த சாஜி என்பவரை இரண்டு தனிப்படை அமைத்து போலிசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here