தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் சர்க்கரைக்கான குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அரிசி வாங்கும் அட்டையாக மாற்றிக் கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டது. நேரடியாக வட்டவழங்கல் அதிகாரியிடமும், ஆன்லைனில் http://www.tnpds.gov.in என்ற இணையதளத்திலும் இன்று முதல் வரும் 26ஆம் தேதி வரை இதற்காக விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் குடும்ப அட்டை நகலை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன.













