உலகின் இளம் யோகா ஆசிரியர் நெல்லைக்காரர்

0
1364

தனது ஒரு வயதில் யோகாவை கற்கத் தொடங்கி, 11 வயதில் உலகின் முதல் இளம் யோகா ஆசிரியர் ஆகியிருக்கிறார் நெல்லை சிறுமி பிரிஷா. இத்தனை வயதுக்குள் 41 உலக சாதனைகளை படைத்துள்ளார்.

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் – தேவிபிரியா தம்பதியின் ஒரே மகள் பிரிஷா.தாய் தேவிப்பிரியா யோகா கற்றுத் தேர்ந்தவர். தனது குழந்தை யோகாவில் மிகப்பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் இருந்து அவருக்கு தினமும் யோகா கற்றுக் கொடுக்க தொடங்கியுள்ளார். அதன் விளைவாக பிரிஷா தனது 5 வயதில் யோகாவில் முதல் தேசிய விருதை எட்டி பிடித்தார்.

மிகவும் சவாலான கண்ட பேருண்டாசனம், ராஜக போட்டாசனம், வாமதேவ ஆசனம், ஏகபாத வாமதேவ ஆசனம், குப்த மற்றும் சுப்த பத்மாசனத்தை ஒரே நிமிடத்தில் பலமுறை செய்து சாதனை படைத்துள்ளார்.

கண்ணை மூடிக்கொண்டு நீருக்கடியில் ஆசனம் செய்தது, கண்ணை மூடிக்கொண்டு புத்தகம் வாசிப்பது, கண்களை மூடிக்கொண்டு சைக்கிள் ஓட்டுவது, அடுத்தவர் நினைப்பதை உனடியாக சொல்வது என பல்வேறு திறமைகளை பெற்றுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த வங்கி தேர்வில் பிரிஷா குறித்த கேள்வியும் இருந்தது. “யோகா இன்றே செய்வோம், இன்பம் பெறுவோம்”. என்ற புத்தகத்தை பிரிஷா எழுதியுள்ளார் .

இதுவரை 200க்கும் மேற்பட்ட மெடல்கள்,சான்றிதழ்களை வாங்கி குவித்துள்ளார். அது தவிர நெல்லையில் அமைந்துள்ள பார்வையற்றோர் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு தினமும் யோகா கற்றுக்கொடுத்து வந்தார். இவரது பயிற்சியில் பார்வையற்ற மாணவர் கணேஷ் குமார் என்பவரும் உலக சாதனை படைத்து சிறுமிக்கு மேலும் பெருமையை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளார். தற்போது கொரனா காலம் என்பதால் ஆன்லைன் மூலம் பிரிஷா தனது மாணவர்களுக்கு யோகா கற்றுக்கொடுத்து வருகிறார்.

யோகராணி, யோகக்கலை, யோகஸ்ரீ, சாதனை செல்வி, யோகா லிட்டில் ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை தன்வசப்படுத்தி உள்ளார். இந்த விருதுகளை அனைத்தையும் வைக்க வீட்டில் ஒரு அறையையே ஒதுக்கி உள்ளனர் .

இளம் வயதிலேயே அதிக உலக சாதனை செய்தது குறித்து டெல்லியில் உள்ள நியூ ஜெருசலம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிப் பாராட்டியது. அதேபோல் உலகின் முதல் இளம் வயது யோகா ஆசிரியர் என்ற பட்டத்தை மத்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here