காவலர் தேர்வு : குமரியில் 8 மையங்களில் 9 ஆயிரம் பேர்

0
770

காவல்துறையில் 2-ம் நிலை காவலர்கள் (ஆண், பெண்), 2-ம் நிலை சிறைக்காவலர்கள் (ஆண், பெண், இரண்டாம் பாலினத்தவர்கள்) மற்றும் தீயணைப்பாளர்கள் (ஆண்கள்) பதவிகளுக்கான பொது எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது.

குமரி மாவட்டத்தில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம், நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, இந்து கல்லூரி, கோட்டார் குமரி மெட்ரிகுலேசன் பள்ளி,

சுங்கான்கடை புனித சேவியர் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி, வின்ஸ் மகளிர் கல்லூரி, வின்ஸ் ஆண்கள் கல்லூரி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வை 9,046 பேர் எழுதுகிறார்கள்

இதையொட்டி நேற்று நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் குமரி மாவட்ட தேர்வு மையங்களையும் ஆய்வு செய்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here