கோவையில் இருந்து சேலத்திற்கு நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன .இந்த பேருந்துகள் அனைத்தும் பாயிண் ட் டூ பாயிண்ட் என்ற பெயரிலும் இடைநில்லா பேருந்து என்ற பெயரில் இயக்கப்படுகின்றன . கோவையிலிருந்து புறப்படும் இந்த பேருந்துகளில் அரசு அறிவித்துள்ள நிலைநிறுத்தங்களான சித்ரா, கருமத்தம்பட்டி, தெக்கலூர், அவிநாசி, பெருமாநல்லூர், விஜயமங்கலம், பெருந்துறை ,ஈரோடு ஆகிய ஊர்களில் செல்லாமல் கோவையில் இருந்து நேரடியாக சேலத்திற்கு செல்லும் பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்கின்றன .
அது தவிர, கோவையிலிருந்து ஈரோடு மற்றும் சேலத்துக்கு இயக்கப்படும் பேருந்துகளிலும் சித்ரா ,சின்னியம்பாளையம், கணியூர் ,கருமத்தம்பட்டி, தெக்கலூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஈரோடு சேலம் செல்லும் பயணிகளை ஏற்றுவதில்லை.
இவ்வாறு கோவையில் இருந்து இயக்கப்படுகின்றன .சேலம் மற்றும் ஈரோடு பேருந்துகளில் இடைநிலை நிறுத்தங்களில் ஏறி இறங்கும் பயணிகளை ஏற்றி செல்லாமல் இயக்குவதால் பெரும்பாலான அரசு பேருந்துகள் கடும் நஷ்டத்தில் இயங்குகின்றன.. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கோவையில் இருந்து சேலம் ஈரோடு செல்லும் பெரும்பாலான பேருந்துகள் அதிகபட்சமாக 10 பயணிகளை மட்டுமே ஏற்றி செல்கின்றன .
சேலம் செல்லும் பயணிகள் மட்டுமே ஏற வேண்டும் என்று கட்டாயப் படுத்துவதால் இந்த பேருந்துகள் காலியாகவே இயக்கப்படுகின்றது. இதனால் கோவை இருந்து சேலம் ஈரோடு செல்லும் பேருந்துகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதற்கு அந்தந்த வணிக மேலாளர், ஓட்டுனர் ,நடத்துனர்கள் காரணம். இவ்வாறு அரசு போக்குவரத்துக் கழகத்தை நஷ்டத்தில் இயக்கி பின்னர் பயணிகளின் அடர்வு எண்ணிக்கை குறைவாக உள்ளது என காரணம் கூறி பேருந்துகளை நிறுத்தி விடும் வாய்ப்புள்ளது.
என்று கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் லோகு தெரிவித்துள்ளார்.













