மெட்ரோ போற போக்கு…

1
563

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக ‘சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட்‘ என்கிற சிறப்புவகை பொதுத்துறை நிறுவனத்தை தமிழ் நாடு அரசு உருவாக்கியது. இந்த நிறுவனம் இந்திய கம்பெனிகள் சட்டத்தின்கீழ் 03.12.2007 அன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து கூட்டு முயற்சியில் செயல்படுத்திடும் வகையில் பின்னர் மாற்றி அமைக்கப்பட்டது.
மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைவரை மத்திய அரசு நியமித்துள்ளது. தற்பொழுது, மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் செயலாளர் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். தமிழ்நாடு அரசால் நிர்வாக இயக்குநர் நியமிக்கப்படுகிறார்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் எட்டு இயக்குநர்களில் நான்கு இயக்குநர்கள் மத்திய அரசாலும், நான்கு இயக்குநர்கள் தமிழக அரசாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மெட்ரோ இரயில் இயக்கப்படும்போது பயணக்கட்டணங்களில் 10 விழுக்காடு அளவு வருவாய் மற்ற வழிகளில் ஈட்டப்படும் என்று மதிப்பிடப்பட்டது. மெட்ரோ இரயில் நிலையங்களின் இடங்கள் வணிக அமைப்புகளுக்கு வாடகைக்கு விடுவதோடு, வாகனம் நிறுத்தும் நிலையங்களுக்கான குத்தகை மூலமாகவும், இரயில் பயணச்சீட்டு, இரயில் நிலையங்கள், வாகனங்கள் ஆகியவற்றில் விளம்பரங்கள் செய்வதன் மூலமாகவும்; மெட்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் திரைப்படம் எடுப்பதற்கு அனுமதி வழங்குவதன் மூலமாகவும் வருவாய் பெற வாய்ப்புகள் உள்ளன என மட்டுமே திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், திடீரென 6 மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் தனியார் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘அண்ணா நகர் டவர், அண்ணா நகர் கிழக்கு, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய 6 இரயில் நிலையங்களை தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் நிர்வகிப்பர்.

நிரந்தர பணியாளர்களாக உள்ள நிலைய கட்டுப்பாட்டாளர்கள் அவர்களுக்கு வழி காட்டுவதுடன் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, முறையாக பயிற்சி பெறாத ஒப்பந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதால் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என நிரந்தர ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

1 COMMENT

  1. அனைத்தையும் தகிடுதத்தோம் செய்வதற்காகவே அரசு ஆட்சியில் உள்ளது.நம்மையே யாருக்காவது விற்கும் சூழலை அரசு தொடர வாய்ப்புள்ளது. ஆகவே! பயணிகள் என்றாலும்,பயனாளர்கள் என்றாலும் இந்தக் கருமம்புடிச்ச மெட்ரோ இரயில் எனும் பறக்கும் தொடர்வண்டியில் தங்கள் நேரத்தைச் செலவழிக்கவேண்டாமென கேட்டுக்கொள்கிறோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here