தொழில்கள் பல முடங்கிக்கிடக்கும் இந்த ஊரடங்கு காலத்தில் விவசாயமும் முடங்கிவிடக் கூடாதல்லவா? அதற்குத்தான் தமிழ்நாடு அரசு மற்றும் டா பே நிறுவனம் இணைந்து விவசாயிகளுக்கு இலவசமாக கோடை உழவு செய்து கொடுக்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு மற்றும் டா பே நிறுவனம் இணைந்து விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள மேலத்துலுக்கங்குளம் கிராமத்தில் இத்திட்டத்தினை தொடங்கியுள்ளது.
இதற்கு, 2 ஏக்கருக்கு கீழ் உள்ள சிறு குறு விவசாயிகள் தங்களது நிலத்தின் பட்டாவை இணைத்து பதிந்துவைக்க வேண்டும். கோடை உழவு என்பதால் இத்திட்டம் இரண்டு மாதமே நடைபெறும். தமிழ் நாடு உழவன் செயலி அல்லது ஜே.பார்ம் செயலியை பதவிறக்கம் செய்து ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். உதவி எண்18004200100 ம் உள்ளது. முன்னுரிமை அடிப்படையில், பதிந்துவைத்தவர்களுக்கு உழவு செய்து கொடுக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் முதல் முறையாக தமிழகம் முழுவதும் 1லட்சம் ஹெக்டேர் மற்றும் குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் 8000 ஹெக்டேர் நிலம் இலவசமாக உழவு செய்யப்பட்டது.
2ஆவது முறையாக 1,50,000 ஹெக்டேர் குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் 15,000 ஹெக்டேர் நிலமும் உழவு செய்ய திட்டமிட்டு மேலத்துலுக்கங்குளம் கிராமத்தில்
தொடங்கப்பட்டுள்ளது .













