14 வயது சிறுமி பலாத்காரம் – போக்சோவில் வாலிபர் கைது

0
568

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பொட்டிக்காம் பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 27). இவர் கட்டுமான வேலை பார்த்து வருகிறார். கடந்த 1-ந்தேதி கட்டுமான பணியில் இருந்த போது தனியாக இருந்த 14 வயது சிறுமியை ஆசைவார்த்தைகள் கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அங்கிருந்து தப்பித்து ஓடிவந்தார்.

பின்னர் இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here