’ரேஷன் அரிசி இல்லை, பேப்பர்’ – கப்சா விட்ட பறக்கும் படை, கைது செய்த காவல்துறை

0
1050

திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதி வசந்த் நகரில் சுமார் 30 மூடை ரேசன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் மதுரை மண்டல உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் எஸ்பி உள்ளிட்டோருக்கு சமூக ஆர்வலர் ஒருவர் போனில் தகவல் தெரிவித்தார்.

அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த பறக்கும்படை ‌ தாசில்தார், அரிசி மூடைகளை குத்திப் பார்த்துவிட்டு , ‘அரிசி இல்லை, பேப்பர் கட்டு தான் உள்ளது’ என மாவட்ட வழங்கல் அதிகாரியிடம் கூறியுள்ளார். அந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த புஉணவு பதுக்கல் தடுப்பு போலீசார் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்து மூடைகளை கைப்பற்றி சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்துள்ளனர்.

ரேசன் அரிசி கடத்தல் குறித்து திட்டவட்டமாக தெரிவித்தும் வருவாய் துறை அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்காததோடு, பேப்பர் கட்டு என்று கட்டுக்கதை விட்டதால் அதிர்ச்சியடைந்துள்ள சமூக ஆர்வலர்கள், அந்த அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here