சொக்கம்பட்டியில் போலீஸ் வேன் மோதி 3 பெண்கள் விபத்தில் ஒருவருக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்தது. மேலும் இரு பெண்களுக்கும் காலதாமதமின்றி நிவாரணம் கிடைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இன்று, பலியான பெண்களின் குடும்பத்தினருடன் மமக மாவட்ட செயலாளர் கி.பஷீர்ஒலி, மாவட்ட துணைத் தலைவர் எம் எஸ் அப்துர் ரஹ்மான் மாவட்ட துணை செயலாளர் பாசித், தமுமுக நகர செயலாளர்பாதுஷா ஆகியோர் சென்று கடையநல்லூர் தாசில்தார் அழகப்பராஜாவை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். ‘விரைவில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யப்படும்’ என தாசில்தார் உறுதி அளித்தார்.








