மதுரை தத்தனேரி பகுதியை சேர்ந்தவர் மாடசாமி (37) அப்பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஜெயலெட்சுமி என்பவருக்கும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஏழு வயதில் சபரி என்ற மகன் உள்ளார்.
சபரி பிறக்கும் போதே உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் இடம் மாறிய நிலையில் பிறந்துள்ளார். குறிப்பாக. உடலின் இடப்பக்கம் இருக்க வேண்டிய இதயம் வலது பக்கமும், சீறுநீரகம் உள்ளிட்ட ஒரு சில உறுப்புகள் உடலில் மாறி இருப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். இதனால் சிறுவன் சபரி கடந்த ஏழு வருடங்களாக காய்ச்சல், மயக்கம், தலைசுற்றல், சளி, இருமல் என தொடர்ச்சியாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடும் வேதனைகளை பெற்றோர்கள் எதிர்கொண்டுள்ளனர். கடந்த 6 ஆறு வருடங்களாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சபரிக்கு ஏற்பட்ட சிறு சிறு உடல்நலக்குறைவு பிரச்சனைகளுக்கு இதுவரை 6 லட்ச ரூபாய் செலவழித்து உள்ளதாக மாடசாமி கூறுகிறார்.

கூலி வேலைசெய்து வரும் நிலையில், குடும்பமே தன்னை நம்பி இருக்கும் சூழலில் மகனுக்கு மருத்துவ செலவை செய்யாத முடியாத வறுமை நிலையில் இருப்பதாக கூறுகிறார். அடிக்கடி மகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதால் மதுரை மாவட்ட ஆட்சியரும், அமைச்சர்களும் மருத்துவ செலவுக்கு உதவி செய்யக்கோரி மாடசாமி ஜெயலெட்சுமி தம்பதியினர் மகன் சபரியோடு இணைந்து மனு அளித்தனர்.












