நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜக சார்பாக மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.
இதில், சுஜாதா ஹர்ஷினி என்னும் திருநங்கையை மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 94- வது வார்டு வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.
திருநங்கை சுஜாதா ஹர்ஷினி இதற்கு முன்பாக அதிமுக
மகளிர் அணி மாவட்ட துணைச் செயலாளராக பொறுப்பு வகித்தவர். மற்றும் அமமுக-வின் உறுப்பினராக இருந்தார்.
மேலும், கடந்த ஆண்டு சசிகலா அதிமுக நிர்வாகிகளோடு தொலைபேசியில் உரையாடும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதில், இந்த சுஜாதா ஹர்ஷினி ஆடியோவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.