நண்பர் கடத்தப்பட்டதாக போலீசுக்கு பொய் தகவல் அளித்த போதை ஆசாமிகள் கைது

0
87

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் கோபாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் அருள் பிரகாஷ் (வயது 42). அதே ஊர் சாமி கோவில் தெருவை சேர்ந்த காமராஜ் மகன் சிவகண்ணா (20) மற்றும் நடுவைக்குறிச்சி மெயின் ரோட்டை சேர்ந்த ஜெயசுராஜ் மகன் பாண்டியராஜ். இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இவர்கள் சாயர்புரம் தேரி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிக்கொண்டு அங்குள்ள ஒரு இடத்துக்கு சென்று மதுஅருந்தினர்.

பின்னர் போதையில் அருள் பிரகாஷ், போலீஸ் உதவி எண் 100-ஐ தொடர்புகொண்டு பாண்டியராஜை 5 பேர் கடத்தி செல்வதாக என்று தகவல் தெரிவித்து உள்ளார். பின்னர் அருள் பிரகாஷ் மோட்டார் சைக்கிளில் சிவகண்ணாவை ஏற்றிக்கொண்டு மீன் சந்தை அருகே இறக்கி விட்டு சென்று விட்டார்.

அதன்பிறகு சிவகண்ணா, செல்வம் என்பவரை அழைத்துக் கொண்டு பாண்டியராஜ் வீட்டுக்கு சென்று அவரது மனைவி ஜெனிட்டா மேரியிடம், உங்களது கணவர் பாண்டியராஜை 5 பேர் காரில் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெனிட்டாமேரி சாயர்புரம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் சிவகண்ணாவை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் மது போதையில் 100-க்கு போன் செய்து பொய்யான தகவலை அளித்ததாக தெரிவித்தார். இதையடுத்து சிவகண்ணா, அருள்பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here