ஈ பாஸ் கேட்ட போலீசாருக்கு ஆபாச அர்ச்சனை

0
558

கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு இடையே ஈ பாஸ் கட்டாமாக்கப்பட்டுள்ள நிலையில் வேலூர் மாவட்டம் சுமார் 57 இடங்களில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் திருப்பத்தூர்-வேலூர் மாவட்ட எல்லையான மாதானூர் பகுதியில் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்துள்ளனர். அதில் 6 பேர் இருக்கவே அவர்களை விசாரித்து ஈ பாஸ் கேட்டுள்ளனர். ஆனால் காரில் இருந்த 6 பேரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கண்காணிப்பு பணியில் இருந்த காவலர்களை அவதுறாக பேசி திட்டி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த இளைஞர்களின் பெற்றோர் காவல் துறையினரிடம் மன்னிப்பு கேட்டு மதுபோதையில் இருந்த 6 பேரையும் அழைத்து சென்றனர். காவல் துறை விசாரணையில் குடித்துவிட்டு ஒரே காரில் வந்த 6 பேரும் மாதனூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் அப்பகுதியில் வீணாக சுற்று வருவதாகவும் தெரிவித்தனர். (கீழே காணொளி காண்க)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here