வல்லநாடு அருகே உள்ள வசவப்பபுரம் பசும்பொன் நகரை சேர்ந்த விவசாயி சுடலை முத்துவுக்கு மாலை ராஜா என்ற ஒரு மகனும் கவிதா என்ற மகளும் இருந்தனர். கவிதா ஆன்லைனில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
அவர் அதிக நேரம் செல்போனில் சிலை விடுவதையும் முகநூலில் இருந்ததையும் அண்ணன் மாலை ராஜா கண்டித்தார். இன்று மாலை நாலு முப்பது மணி அளவில் கவிதா செல்போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். அதைக் கண்ட மாலை ராஜா அவருடன் சண்டையிட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அரிவாளால் இரக்கமின்றி தங்கையை சரமாரியாக வெட்டினார். இதில் கவிதா துடிதுடித்து அதே இடத்தில் இறந்தார். மாலைராஜா தப்பியோடினார்.
இதுகுறித்து வழக்கு பதிந்த முறப்பநாடு போலீசார் வல்லநாடு மலைப்பகுதியில் மாலைராஜாவை கைது செய்தனர்.








