தூத்துக்குடி பத்திரப்பதிவு மேலாளர் வீட்டில் சோதனை ரூ.1.2 கோடி சொத்து ஆவணம் கைப்பற்றல்

0
631

தூத்துக்குடி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரிபவர் குருசாமி. இவரது வீடு எட்டயபுரம் சாலையில் உள்ளது

இன்று காலை ஆறு மணி அளவில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி ஹெக்டர் ர தர்மராஜ் தலைமையிலான போலீஸார் குருசாமியின் வீட்டில் சோதனை நடத்தினர்l. மாலை 6 மணி வரை சோதனை தொடர்ந்து நடந்தது.இதில் பணம் நகை எதுவும் கைப்பற்றப்படவில்லை.

ஆனால் வருமானத்திற்கும் அதிகமாக lஅரசு அனுமதியின்றி வாங்கிய 80 லட்சம் மற்றும் 40 லட்சம் ரூபாய்க்கான சொத்து ஆவணம் கைப்பற்றப்பட்டது.இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் ஆகும்.அதன் பின்பு நடவடிக்கை தொடரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here