ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க தீபக் எதிர்ப்பு

0
1231

அதுவரை எங்கிருந்தார்களோ, ஜெயலலிதா சுகவீனப்பட்ட போது தீபக் வந்தார். இறந்த பிறகு தீபா வந்தார். ஆனால், அதன்பின்பு ரத்த சம்பந்தம் என்ற சட்ட பாயின்டை வைத்து அவர்கள் பண்ணும் ரவுசுகள் எல்லாம் ஒரு தினுசு.
ஜெயலலிதா கடனுக்கு பொறுப்பேற்கவில்லை, தண்டனையில் பங்கேற்கவில்லை. சொத்துக்கு பங்கு கேட்டு நின்றார்கள். இப்போது, பொது மனுஷியான ஜெயலலிதா பற்றை செய்தி, கட்டுரை, படம், தொடர் என எதற்கு முயன்றாலும் குறுக்கே வருகிறார்கள்.

ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு திரைப்படங்களை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. ‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் நித்யா மேனன் நடிப்பில் ஒரு படமும், ஏ.எல். விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற பெயரில் ஒரு படமும் உருவாகி வருகிறது.

ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு வலைத்தள தொடர் ஒன்றை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். இதில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இந்த வலைத்தள தொடருக்கு ‘குயின்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக், தனது குடும்பத்தினரின் அனுமதியின்றி ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை படமோ, வலைத்தள தொடரோ யாரும் எடுக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here