சென்னை போரூரில் உள்ள தனியார் வங்கியில் உயர் அதிகாரியாக பணியாற்றிய ஒருவர் தனது மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்து தனது இரு மகன்களையும் பனியன் துணியால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்து, பின்னர் தான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆன்லைனில் பணத்தை இழந்ததால் சோக முடிவா என போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
பெருங்குடி பெரியார் சாலையில் உள்ள தனியார் உள்ள ஃபாலிங் வாட்டர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 7 வது தளத்தில் வசித்து வந்தவர் மணிகண்டன்(36). தனியார் வங்கி அதிகாரி. இவருக்கு தாரா (35) என்ற மனைவியும், தரன் என்ற 10 வயது மகனும், தாஹன் என ஒரு வயது மகனும் இருந்தனர். மணிகண்டன் போரூரில் உள்ள பிரபல தனியார் வங்கியில் துணைத்தலைவர் அந்தஸ்த்தில் பணியாற்றி வந்துள்ளார். மாதம் 2.5 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கினாலும் கடனில் தவித்துள்ளார். இதனால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.