திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே சமயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில் பிரதி வாரம் சனிக்கிழமை ஆடு வாரச் சந்தை நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.
இந்த வாரச் சந்தைக்கு லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் உள்ளிட்ட பகுதி ஆடு வளர்ப்போர் வாங்குவோர் மட்டுமல்லாது அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டடங்களிலிருந்து மொத்த வியபாரிகளும் இந்த வாரச்சந்தைக்கு வருவது zவழக்கம்.
வரும் 21 ஆம் தேதி பக்ரீத் விழாவை முன்னிட்டு இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆடுகளை கொள்முதல் செய்தனர்.

ஆனாலும் வழக்கமாக இந்த வாரச் சந்தையில் வாரம் சுமார் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடந்த நிலையில், பக்ரீத் பண்டிகையினை முன்னிட்டு நடைபெற்ற வாரச் சந்தையில் ஆடுகள் வரத்து குறைவாக இருந்ததால், விற்பனையும் மந்தமாக நடைபெற்றது.
கொரோனா பரவல் தொடர்பாக பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்த தால் இந்த வாரச் சந்தை நடைபெற அரசு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் நாளாக ஆடு விற்பனை வாரச் சந்தை கூடியதால் ஆடுகளை விலைக்கு வாங்க வியபாரிகள் அதிகளவில் கூடிய நிலையில் , ஆடுகள் குறைவாக வந்திருந்தது வியபாரிகளுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது. ஆடுகள் வரத்து குறைவாக இருந்ததால் ஆடுகளின் விலைகள் அதிகமாக காணப்பட்டது.












