தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெள்ளத்தால் சேதம் அடைந்த சாலைகளில் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் சீரமைப்பு பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஆனது விளாத்திகுளம், நாகலாபுரம், பந்தல்குடி சாலை, அருப்புக்கோட்டை சாலை, மணியாச்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஜெயராணி ஆய்வு செய்தார்.









