மின் இணைப்பு முறைகேடு செயற்பொறியாளர் இடமாற்றம்

0
424


கோவை மண்டல மின் பகிர்மான மாநகர் வட்டத்தில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் மத்திய கோட்ட அலுவலகம் உள்ளது. இந்த கோட்ட அலுவலகத்திற்கு கீழ் கடைவீதி, செல்வபுரம் ,பொன்னைய ராஜபுரம் உக்கடம், ராமநாதபுரம், ராம் நகர் உள்ளிட்ட 19 பிரிவு அலுவலகங்கள் இக்கோட்டத்தின் கீழ் உள்ளன. இதில் செயற்பொறியாளர் ஆக பணிபுரிந்து வருபவர் வைதீஸ்வரன். இவரது கட்டுப்பாட்டிலுள்ள பல்வேறு பிரிவு அலுவலகத்தில் விதிகளை மீறி மின்னிணைப்பு வழங்கியது, இறந்தவர் பெயரில் அடுக்குமாடி குடியிருப்புக்கு மின் இணைப்பு வழங்கியது, கடைவீதி, பொன்னைய ராஜபுரம், செல்வபுரம் ஆகிய பிரிவு அலுவலகத்தில் மின்வாரியத்திற்கு கட்டணம் வசூல் செய்யாமலேயே விதிகளை மீறி மின் பெட்டி இடமாற்றம் செய்தது மற்றும் மின் கம்பத்தில் இருந்து மின் பெட்டி வரை வயர்களை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்கள் தொடர்பான புகார்களை கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்புச் செயலர் நா.லோகு சென்னையிலுள்ள மின் வாரிய தலைவர் மற்றும் இயக்குனர் கூடுதல் காவல்துறை தலைவர் விழிப்புப் பணி கோவையில் உள்ள தலைமை பொறியாளர் ஆகியோருக்கு புகார்களை அளித்துள்ளார் .இதுதொடர்பாக சென்னையில் உள்ள கூடுதல் காவல்துறை தலைவர் தலைமையில் இயங்கும் விழிப்புப் பணி விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் இந்த கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு விதி மீறல்கள் மற்றும் புகார்கள் தொடர்பாக எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் வைத்தீஸ்வரன் கிடப்பில் போடப்பட்டதாக தெரியவருகிறது. இதுகுறித்து விரிவான புகார் சென்னை தலைமை அலுவலக அனுப்பப்பட்டது. இந்நிலையில் மத்திய கோட்ட செயற்பொறியாளர் வைதீஸ்வரன் பல்லடம் துணை மின் நிலைய செயற் பொறியாளராக இடமாற்றம் செய்து மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. பல்லடம் துணை மின் நிலையத்தில் பணிபுரியும் துரைசாமி என்பவரை கோவை மாநகர் மத்திய கோட்டத்தின செயற் பொறியாளராக நியமனம் செய்துள்ளது. மேலும் மத்திய கோட்டத்திற்குட்பட்ட பிரிவு அலுவலகங்களில் விதிகளை மீறி வழங்கப்பட்ட மின் இணைப்புகள் மற்றும் மின்வெட்டு இடமாற்றம் குறித்து முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலர் லோகு கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here