உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 11 கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் ஒவ்வொரு மாத மாதம் எண்ணும் பணி நடைபெறும்,
கொரானா இரண்டாம் அலை ஊரடங்கு
காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கோவில்கள் முழுமையாக மூடப்பட்டன. இதன் காரணமாக பொதுமக்கள் கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில்,கடந்த மாதம் ஐந்தாம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது
.தொடர்ந்து,இன்று மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது, இதில் கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

உண்டியல் வருமானமாக 60 லட்சத்து 10ஆயிரத்து 450 ரூபாய் ரொக்கப் பணமும்,460 கிராம் தங்கமும், 750 கிராம் வெள்ளியும், 31வெளிநாட்டு பணமும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது,
ஒவ்வொரு மூன்று மாதத்திலும் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு கோவில் உண்டியல் வருமானம் வரும் நிலையில் ஊரடங்கு காரணமாக கோவில் உண்டியல் வருமானம் குறைந்த அளவே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.














