நடத்தை சந்தேகம்: அண்ணன் மகனுடன் சேர்ந்து மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவன் கைது

0
1112


திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கோவில் பிள்ளை என்பவரது மகன் செல்லையா (36). இவர் மனைவி உமா தேவி ( 28) மற்றும் இரு குழந்தையுடன் கணபதி அடுத்த விஜி ராவ் நகர் ஈபி காலனியில் 10 வருடங்களாக வசித்து வருகிறார். செல்லையா பீளமேடு பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது அண்ணன் வரதன் என்பவருடைய மகன் அந்தோணி ராஜ் ( 24 ) இவர்களது வீட்டிலேயே தங்கி சரக்கு வாகனத்தின் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் உமாதேவி அடிக்கடி வேறு ஆண்களுடன் செல்போனில்

அடிக்கடி பேசி வந்தார்.வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளதாகவும் கணவர் செல்லையா சந்தேகம் அடைந்தார்.

இதையடுத்து  செல்லையா மற்றும் அவரது அண்ணன் மகன் அந்தோணிராஜ் இருவரும் நேற்று இரவு உமா தேவியிடம் தகராறு செய்து அவரை அடித்து உதைத்து உள்ளார்கள். இதனால் மயங்கிய உமாதேவியை அத்திபாளயம்  பிரிவில் உள்ள சிவா  மருத்துவமனைக்கு கால் டாக்சி மூலம் அழைத்துச் சென்று சிகிச்சையளித்து வீட்டிற்கு திரும்பி உள்ளார்கள். இந்நிலையில் மீண்டும் உமா தேவியிடம் கள்ளக்காதலனை பற்றியும் செல்போனில் யாருடன் பேசுகிறா றாய் என்று கேட்டு இருவரும் மீண்டும் தகராறு செய்து உள்ளனர்.தகராறு முற்றிய நிலையில் உமாதேவியை வீட்டிலிருந்த சேலையை எடுத்து கழுத்தை இறுக்கி செல்லையாவும் அவரது அண்ணன் மகன் அந்தோணிராஜ் ஆகியோர் கொலை செய்துள்ளார்கள்.சத்தம் கேட்ட  அருகில் இருந்தவர்கள் சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உமாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து செல்லையாவை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகிறார்கள்.மேலும் தப்பியோடிய அந்தோணிராஜை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here