கயத்தாறு அருகே விவசாயி தற்கொலை

0
564

கயத்தாறு அருகே உள்ள கரிசல்குளத்தை சேர்ந்தவர் வீரபுத்திரன் (வயது 50), விவசாயி. இவருக்கு 10 வருடங்களுக்கு முன்பு கிணறு வெட்டும் போது காலில் கல் விழுந்து புண் ஏற்பட்டுள்ளது. இந்த புண்ணிற்கு பல்வேறு பகுதியில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. சம்பவத்தன்று இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து உயிருக்கு போராடி உள்ளார்.

அப்போது அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் வீரபுத்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here