மகன்கள் இறந்த சோகம் கோவையில் இருவேறு இடங்களில் தாய், தந்தை தற்கொலை

0
479

[11/07, 9:43 am] Vijayan Covai: CB
கோவை வேலாண்டிபாளையம் அடுத்த கோவில் மேடு பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் கார்த்திக் (36 ).இவர் தனது மனைவி பிரியதர்ஷினி( 32 ) உடன் வசித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கார்த்திக்கின் 3 வயது மகன் நோய்க் காரணமாக இறந்தார். இதனால் கார்த்திக் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலுடன் மனவியாதி ஏற்பட்டு புலம்பியபடியே இருந்து வந்துள்ளார் .இதையடுத்து அவரது குடும்பத்தார் கார்த்திக்கை வடவள்ளியில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்து கடந்த வாரம் கார்த்திகை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

தொடர்ந்து பீளமேடில் உள்ள மனைவி பிரியதர்ஷினியின் தந்தை வீட்டில் சென்று தங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று வீட்டின் மொட்டை மாடியில் உள்ள அறையில் ஓய்வு எடுப்பதாக கூறிய கார்த்திக் வெகுநேரமாக அறையைவிட்டு வராததால் சந்தேகமடைந்த அவரது மாமனார் கதவை தட்டிப் பார்த்தார் .ஆனால் கதவை திறக்காததால் அருகிலுள்ளவர்கள் உதவியுடன் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது கார்த்திக் பாதி எரிந்த நிலையில் கிடந்தார். அருகில் உள்ளவர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கார்த்திக் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல்,வேலாண்டிபாளையம் கொண்ட சாமி வீதியைச் சேர்ந்த சேர்ந்த ரவி – மனோன்மணி தம்பதியர் மகன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இதனால் மனோன்மணி கடந்த சில மாதங்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மனோன்மணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here