வாட்ஸ் ஆப்பால் வாட்டம் போக்கிய வாலிபர்கள்

0
1280

ராமநாதபுரம் திருப்புல்லாணி வட்டாரத்தில் உள்ள கருக்காத்தி கிராம நீர் நிலை உடைமரங்கள் மூடிக்கிடந்தது. கிணறுகள் பயனற்று தூர்ந்து கிடந்தன.
இந்நிலையில், கிராமத்திலிருந்து வெளியிடங்களுக்கு பிழைப்புக்காக சென்றிருந்த வாலிபர்கள் கருக்காத்தி & 2025 என்ற வாட்ஸ் ஆப் குழுவை தொடங்கினர். அதன்மூலம் நிதி திரட்டி பொக்லைன் மூலம் உடைமரங்களை அகற்றி நீர்நிலைகளை தூர் வாரினர்.
இதற்காக ஆண்டுதோறும் நடத்திய ஆடல், பாடல் நிகழ்ச்சியை நிறுத்தினர். அதற்கான பணத்தை குடிநீராதாரத்தை மேம்படுத்த செலவழித்தனர். இப்போது சவரம் செய்த முகம் போல உடைமரங்கள் அகற்றப்பட்டு ஊர் ஜொலிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here