திருட்டு மது விற்பனை : 38 பேர் கைது

0
947

நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக மதுபான பாட்டில் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .மணிவண்ணன் காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று நடத்தப்பட்ட தீவிர சோதனையில், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்ற 38 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 654 பாட்டில்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here